இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 544 சிறைக் கைதிகள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறிய குற்றங்கள் காரணமாக சிறையிலடைக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்டெனிய தெரிவித்தார். அநுராதபுரம், களுத்துறை, நீர்கொழும்பு மற்றும் மஹர உட்பட நாடு பூராகவுமுள்ள சிறைச்சாலைக் கைதிகள் சிலரை இன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.