நீண்டகாலத்திற்கு பின்னர் கொழும்பு – கோட்டையில் இருந்து பண்டாரவளை வரை கடந்த 29 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த பெட்ரிக் நோர்த் என்ற நீராவி புகையிரதம் நான்கு நாள் வெற்றிகரமான பயணத்தை முடித்து கொண்டு நேற்றுமாலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இரண்டு நீராவி இயந்திரங்களை கொண்ட இந்த புகையிரதத்தில் ஜேர்மன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பயணிகள் பயணம் செய்தனர். இலங்கையில் இந்த நீராவி புகையிரதத்தில் பயணிக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகவும் விருப்பம் கொண்டுள்ளனர். நீராவி புகையிரதத்தில் பயணிக்க ஆசனங்களை ஒதுக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமான கட்டணத்தை செலுத்துகின்றனர். மிகவும் பழமையான இந்த நீராவி புகையிரதம் சிறப்பாக ஓடும் நிலைமையில் இருப்பதாகவும், மேலும், புகையிரதத்தில் பயணிக்கும் வெளிநாட்டவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் புகையிரத பெட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்கள உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.