யாழ். கோப்பாய் பகுதியில் சிறுமி ஒருவர் நேற்று ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தபோது கழுத்தில் ஊஞ்சல் கயிறு இறுகியதால் சுவாசத்தடை ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த 9வயதுடைய சிவநேசன் அக்சயனி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அக்சனியாவை நித்திரை செய்ய வைத்துவிட்டு பெற்றோர் சந்தைக்கு சென்றுள்ளனர். சந்தையிலிருந்து திரும்பி வருகையில் குறித்த சிறுமி கட்டிலில் காணப்படாமையை தொடரந்து பெற்றோர் தேடியுள்ளனர். இதன்போது கழுத்து பகுதி இறுகியநிலையில் ஊஞ்சலில் காணப்பட்டுள்ளார். இதன்போது பெற்றோர் சிறுமியை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் சிறுமி கொண்டு வருவதற்கு முன்னரே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியின் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைத்துள்ள நிலையில் யாழ் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.