மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயிலுடன், அங்குலானைப் பகுதியில் வைத்து லொறி ஒன்று மோதியதால் ரயில் மிதிபலகையில் பயணத்த நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 4.55 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் இருவரின் நிலை கவaலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்களுள் சீனாவைச் சேர்ந்தப் பெண்ணொருவரும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.