மானஸ் தீவில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏதிலிகள் சிலர், பப்புவா நியு கினி நாட்டில் இருந்தும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீவு மூடப்பட்டதை அடுத்து, அங்கிருந்த ஏதிலிகள் பப்புவா நியுகினியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களில் சிலரை பப்புவா நியுகினியில் இருந்தும் அகற்றவிருப்பதாக அவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் அவர்கள் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக, அவர்களது சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் கடிதத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்நிலையில் குறித்த ஏதிலிகள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் உரிய விளக்கம் இல்லை என்று ஏதிலிகள் சார்ந்த சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த ஏதிலிகள் பப்புவா நியுகினியில் இருந்து சுயவிருப்பின் பேரில் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பிச்செல்ல ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .