வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எஸ்.எம்.எ. நியாஸ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாண சபையின் உறுப்பினராக இருந்த றயிஸ் ராஜினமா செய்து கொண்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிதாக எஸ்.எம்.எ. நியாஸ் சத்திய பிரமாணம் செய்து கொண்டார். இவர் பேராதனை பல்கலைக் கழகத்தில் புவியியல் துறையில் சிறப்பு கலை பட்டதாரி என்பதுடன் தென்கிழக்கு பல்கலைகழத்தின் ஆங்கில மொழி துறையின் முன்னாள் போதனாசிரியர் ஆவார்.