சர்வதேச அளவில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் இண்டர்பொல் சிவப்பு அறிவித்தல் ஒன்று இல்லை என்றும் உறுதியானதையடுத்து தான் சர்வதேச பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.

எனினும் தற்போதைய அரசாங்கத்தால் தனக்கு ஏற்பட்ட பாரிய அரச பழிவாங்கல் காரணமாக தற்போது இலங்கைக்கு வருகை தரும் நோக்கம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த 04ம் திகதி அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்த சந்தர்பத்தில் டுபாய் விமான நிலையத்தில் வைத்து சர்வதேச பொலிஸாரால் உதயங்க வீரதுங்க விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

இலங்கை பொலிஸாருக்கு எதிராக சர்வதேச இழப்பீட்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்கு மிகவும் சிறசந்த சந்தர்ப்பம் ஒன்று தனக்கு எற்பட்டுள்ளமைக்கு தான் சந்தோசப்படுவதாக உதயங்க வீரதுங்க வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.