இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமரையும் சந்தித்துள்ளார். அதேபோல, அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப், அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, நேற்றையதினம் மாலை சந்தித்துள்ளனர்.

இந்திய – அமெரிக்க தூதர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து, இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் உள்நாட்டு ரீதியாக மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.