ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு தொடர்பில் கல்கிஸ்ஸ பிரதேசத்திற்கு பொறுப்பாகயிருந்த முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் தடுப்பு பிரிவினால் நேற்று இரவு பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். உடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி கல்கிஸை பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார்.இந்நிலையில் குறித்த கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே கல்கிஸை பிரதேசத்திற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் இன்று கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.