கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரு பிள்ளைகளின் தாயான இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வட்டக்கச்சி 10 வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா (வயது 24) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த குறித்த பெண்ணுக்கு ஏழு மற்றும் ஒன்றரை வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளனர். பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளியே சென்றுள்ளார். சடங்கு நிகழ்வு ஒன்றுக்கு அயலவர்களும் சென்றிருந்த வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்புறமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குற்றத்தடயவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.