கொழும்பு, ஆமர்வீதி கிராண்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 பேராக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். கொழும்பு, கிராண்பாஸ் பபாபுள்ளே மாவத்தையில் தேயிலை களஞ்சியப்படுத்தி வைக்கும் பழமையான கட்டிடம் ஒன்று நேற்றுமாலை இடிந்து விழுந்துள்ளது. கிரெண்ட்பாஸ், பபாபுள்ளே மாவத்தையில் சுலைமான் வைத்தியசாலைக்கு அருகிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.