யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பராராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ. சுமந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சந்திப்பின் நிறைவில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ்ப்பாண மாநகரசபை பிரதி முதல்வராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.