வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் வழங்ககோரி நேற்றுக்காலை தொடக்கம் தற்கொலை செய்வதற்கான மருந்து போத்தல்களுடன் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்திவருகின்றனர்.

இதேபோல் மத்திய கல்வி அமைச்சின் முன்பாகவும் வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 182 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில் வட மாகாண முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தால் அது தடைப்படுள்ளதாகத் தெரிவித்தே வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான தொண்டராசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கொழும்பில் மத்திய கல்வி அமைச்சின் முன்பாகவும் நேற்றுமுதல் தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் எனக்கூறி மருந்து போத்தல்களுடன் போராட்டத்தினை நடத்தி வருகின்றார்கள்.