ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு விஜயராம பகுதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த பின்னர் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கச் சென்றுள்ளனர். இதேவேளை, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று முற்பகல் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இந்நிலையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அலரி மாளிக்கைக்கு சென்றுள்ளனர். பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அமைச்சர்களான அகிலவிராஜ் காரியவசம், ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்னாயக்க உள்ளிட்ட சிலரும் இன்றுமுற்பகல் அலரிமாளிகைக்கு சென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.