உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள், எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அரசாங்க அச்சகத்துக்கு நேற்றையதினம் வழங்கியுள்ளது.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8,325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கடந்த சனிக்கிழமை (10.02.2018) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களே, எதிர்வரும் 6ஆம் திகதி, தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.