கொழும்பு புதுக்கடை (ஹல்ஸ்டோர்ப்) நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது. இன்றுபிற்பகல் 4.30மணியளவில் இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டுள்ள நிலையில், காவற்துறையினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் சந்தேகநபர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.