இந்த வருடத்தில் 35 நாட்களில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் மிதிப்பலகையில் பணித்தவர்கள் மற்றும் தொடருந்து கடவைகளில் வீதி மாறியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தொடரூந்து வீதிகளில் பயன்படுத்தும்போது அவதானத்துடன் இருக்க வேண்டும் என, தொடருந்து பாதுகாப்பு முகாமையாளர் அநுர பிரேமரத்ன கோரியுள்ளார். இதேவேளை, கடந்த வருடத்தில் பயணச்சீட்டின்றி தொடரூந்தில் பயணித்த 1295 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, 40லட்சத்து 32ஆயிரத்து 772ரூபா ஈட்டப்பட்டுள்ளாகவும் தெரிவிக்கப்படுகின்றது.