ஈரான் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

பயண்டர் (Bayandor), நக்டி (யேபான), டொன்ப் ((Tonb) என்ற போர் கப்பல்களே கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தாக கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த மூன்று போர்க் கப்பல்களும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து நிற்கவுள்ளன. இந்த காலப்பகுதியில் அந்தக் கப்பல்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த கப்பலில் இலங்கைக்கு வருகைதந்துள்ள ஈரான் கடற்படை உயர் அதிகாரிகளுக்கும், இலங்கை கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.