வவுனியா – நெடுங்கேணியில் நேற்று இரவு 7 மணியளவில் போக்குவரத்துப் பொலிஸாரினால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரிடம் அவரது பையினை சோதனை மேற்கொண்டபோது ரி56 ரக துப்பாக்கியும் 611 ரவைகளையும் அவரிடமிருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தொவித்துள்ளனர்.

குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த 45 வயதான சிவசம்பு ஜெயரதன் என்பவரை சோதனையிட்ட போதே துப்பாக்கியும் துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்ததோடு அவரது வீட்டையும் சோதனை செய்துள்ளனர்.