இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து தாய்லாந்து அரசாங்கம் ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து அரசாங்க தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. தெற்காசியாவில் இலங்கை முக்கிய பொருளாதார மையமாக திகழ்கிறது. அத்துடன் கடந்த காலங்களில் இலங்கையின் பொருளாதாரம் ஆரோக்கிய நிலையில் இருந்து வந்துள்ளதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை கருத்திற்கொண்டே, இலங்கையுடன் பொருளாதார உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதில் தாய்லாந்து ஆர்வம் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.