எமக்கு இறு­தி­யாக கிடைத்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்­தி­ரி ­பால சிறி­சேன ஆகிய இரண்டு ஜனா­தி­ப­தி­களும் கொழுக்­கட்­டையும், மோத­கமும் போன்­ற­வர்கள். உருவம் வேறாக இருந்­தாலும் அவர்­களின் செயற்­பா­டுகள் ஒன்­றா­கவே இருக்­கின்­றன என கிளி­நொச்சி மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் இணைப்­பாளர் லீலா­வதி தெரிவித்­துள்ளார்.

கிளி­நொச்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் போராட்டம் மேற்­கொள்ளும் இடத்தில் நேற்­றைய தினம் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து உரை­யாற்­றி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில்,தென்­னி­லங்­கையில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் மாற்­றத்­தினால் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் விட­யத்தில் எவ்­வித மாற்­றத்­தி­னையும் எதிர்ப்­பார்க்க முடி­ய­வில்லை.

இரண்டு ஜனா­தி­ப­தியும் எமது பிள்­ளைகள் தொடர்பில் பல கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். மாறாக அவர்­களால் எமக்கு எவ்­வித முடி­வு­க­ளையும் பெற்றுத் தர­மு­டி­யா­துள்­ளது. எமக்கு எமது பிள்­ளை­களே வேண்டும்.

நாம் வீதி போராட்­டத்­தினை ஆரம்­பித்து எதிர்­வரும் 20ஆம் திக­தி­யுடன் ஒரு வருடம் பூர்த்­தி­யா­கின்­றது. இது­வரை எமக்கு உத­விய அனைத்து சிவில் அமைப்­புக்கள், பொது­மக்கள், வர்த்­த­கர்கள், அர­சி­யல்­வா­திகள் அனை­வ­ருக்கும் நன்றி தெரி­விக்­கின்றோம்.
எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை நாம் பாரிய அள­வி­லான போராட்டம் ஒன்றை ஐ.நாவிற்கு கேட்கும் வகையில் முன்­னெ­டுக்க உள்ளோம்.

இதற்கு ஒத்­து­ழைக்கும் வகையில் வர்த்­த­கர்கள் பொது­மக்கள் சிவில் அமைப்­ட­புக்­க­ளி­னு­டைய ஒத்­து­ழைப்­பி­னையும் வேண்டி நிற்­கின்றோம். அன்றைய தினம் வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி எமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.