சீன முதலீடுகளுக்கும், முதலீட்டுத் திட்டங்களுக்கும் முனைப்புடன் ஆதரவு வழங்க இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக சீன நாளிதழான சைனா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சீன தூதுவர் இற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், தொழில் வலயங்கள் உள்ளிட்ட சீன முதலீடுகளுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் அரசியல், பொருளாதார மற்றும் உற்பத்தித்துறை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.