ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் நகரிலிருந்து யசூச் நகருக்கு சென்ற பயணிகள் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 66 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டெஹ்ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நகரத்திற்கு இன்றுகாலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் ஏசெமன் விமான நிறுவனத்தின் ATR-72 என்ற அந்த விமானத்தில் 66 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. வானில் பறந்து கொண்டிருக்கும்போதே ரேடாரில் இருந்து விமானம் மாயமாகியுள்ளது.இதனையடுத்து, டெஹ்ரானில் இருந்து 480 கி.மீ தொலைவில் தென்மேற்கு பகுதியில் உள்ள செமிரோம் மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளனதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் இருந்த 66 பேரும் பலியானதாக ஈரான் அஸீமான் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மோசமான காலநிலை காரணமாக சம்பவ இடத்துக்கு மீட்பு ஹெலிகாப்டர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. மோசமான வானிலை மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததால் விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால குழுக்கள் ஹெலிகாப்டர்களில் செல்வதற்கு பதிலாக சாலை வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான குளிவந்த் கூறியுளளமை இங்கு குறிப்பிடத்தக்கது.