மாகா­ண­சபைத் தேர்­தல்­களை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் நடத்த உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது என்றும் அதற்­கான ஏற்­பா­டுகள் எதிர்­வரும் மே மாத­ம­ளவில் ஆரம்­பிக்­கப்­படும் எனவும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லின்­போது, ஏதேனும் அர­சியல் கட்சி அல்­லது வேட்­பா­ளர்கள், பணம், பொருட்கள் அல்­லது வேறேதும் பெறு­ம­தி­யான பொருட்­களை வாக்­கா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யது உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால், அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு தேர்தல் ஆணைக்­குழு நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.
இல்­லா­விட்­டாலும் உள்­ளூ­ராட்சி சபை­களை இயக்­கக்­கூ­டிய வகையில் பாரா­ளு­மன்ற சட்­டத்தில் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென தெரி­வித்­துள்ள அவர் உள்­ளூ­ராட்சி சபை­களில் பெண்­களின் 25 சத­வீத பிர­தி­நி­தித்­து­வத்தைக் கட்­டா­ய­மாக்­கி­யதன் மூலம் தேர்தல் பெறு­பே­றுகள் வெளி­யா­னது முதல் பாரிய குழப்­ப­நிலை உரு­வா­கி­யி­ருப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

எவ்­வா­றா­யினும் வெற்றி பெற்ற ஆச­னங்­களின் எண்­ணிக்கை இரண்­டிலும் குறை­வாக இருந்தால், அவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் குறிப்­பிட்ட சபையில் பெண்­களின் நிய­ம­னத்தை நிர்ப்­பந்­திக்கக் கூடாது என்றும் கட்சி அல்­லது குழு தனக்­கு­ரிய ஆச­னத்­தையும் விட வட்­டா­ரத்தில் கூடுதல் வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தால் பட்­டி­யலில் இருந்து எவ­ரையும் நிய­மிக்க முடி­யாது என்றும் அதே சட்­டத்தில் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் விளக்­க­ம­ளித்தார்.

அநே­க­மான உள்­ளூ­ராட்சி சபை­களில் பெண் பிர­தி­நி­தி­களை நிய­மிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. உதா­ர­ண­மாக காரைதீவின் முடிவுகளின் படி இரண்டு பெண் பிரதிநிதிகள் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும். எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் பிரதிநிதியை நியமிக்க முடியாத நிலை அங்கு உருவாகியுள்ளது. என்றும் அவர் தெரிவித்தார.;