ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் 26 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹ_சேன் ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர். இதன்­போது இவர்கள் இரு­வரும் இலங்கை தொடர்பில் சில விட­யங்­களை முன்­வைப்­பார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இம்­முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான இரண்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்­ள­துடன் இலங்கை குறித்து பல்­வேறு அறிக்­கை­களும் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன. இலங்கை தொடர்­பான விவா­தத்­தின்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹ_சைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை வெ ளியி­ட­வுள்­ள­துடன் அதில் அவர் தனது அதி­ருப்­தியை வெளியி­டுவார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

செய்ட் அல் {ஹசேனின் இலங்கை குறித்த மீளாய்வு அறிக்­கையை தொடர்ந்து இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் அறிக்கை ஒன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது வெளி­வி­வ­கார அமைச்சர் இலங்­கையின் சார்பில் அறிக்­கையை முன்­வைப்பார் என்­ப­துடன் இலங்­கை­யா­னது ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்து விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.

இது இவ்­வாறு இருக்க இலங்கை குறித்த ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்ட போதிலும் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில் இது­வரை சரி­யான முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹஷ-சேன் கடும் அதி­ருப்­தியை வெளியி­ட­வுள்­ள­துடன் பாரிய அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் சர்­வ­தேச அமைப்­புக்­களும் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக பல்­வேறு விட­யங்­களை சுட்­டிக்­காட்டும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் இலங்கை குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.