யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் எல்லா மாவட்டங்களிலும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இவ்வாறு கிளிநொச்சியிலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 365வது நாளாக தீர்வின்றி இரவு பகலாக தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை என நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்திருந்த நிலையிலும் இவர்களின் போராட்டம் தொடர்கிறது. இதேவேளை இனிவரும் நாட்களில் தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றவுள்ளதாக கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்திருந்திருந்தனர்.