நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள சிறீலங்கா சுதந்திரக்கட்சியினர் தீர்மானித்துள்ளார்கள்.

அதன்படி ஒரு புதிய பிரதமரை நியமிப்பதில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் கருத்தை பெற வேண்டியுள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற பிரதி சபாநாயகரும் அமைச்சருமான திலங்க சுமதிபால நேற்றிரவு தெரிவித்துள்ளார். அதேபோல், தேசிய அரசாங்கத்திலிருந்து விலகும் முடிவைத் தெரியப்படுத்தியுள்ளதாக, சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவும் தெரிவித்துள்ளார். இது தவிர, புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வியாக்கியானத்தை, ஜனாதிபதி கோருவாரெனவும், திலங்க சுமதிபால கூறியுள்ளார்.