சுமார் 7.6 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் உபரியாக வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குடிமக்கள் அனைவருக்கும் சிறப்பு மேலதிக கொடுப்பனவு வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் ஹெங் ஸ்வீ கீட் சமீபத்தில் நிதி வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார். அதில், அரசுக்கு சுமார் 7.6 அமெரிக்க டொலர் வருவாய் உபரியாக உள்ளதாக தெரிவித்தார்.(உபரி வரவு செலவுத் திட்டம் என்பது செலவுகளை விட வருவாய் அதிகம் இருக்கும் திட்டம்) இதனால், சிங்கப்பூர் குடிமக்கள் அனைவருக்கும் சிறப்பு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என அவர் அறிவித்தார். 21 வயது நிரம்பிய குடிமகன் இந்த கொடுப்பனவை பெற தகுதியானவர் ஆவார். சுமார் 27 இலட்சம் பொதுமக்கள் இதனால் பயன்பெறவுள்ளனர்.