திருகோணமலை மூதூர் கிளிவெட்டி பாலத்திற்கு கீழிருந்து 10 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 40 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த கிரேனெற் லோன்சர் ரக சிறிய குண்டுகளே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நேற்று இந்த குண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குண்டு செயலிழப்பு பிரிவுக்கு வழங்கிய தகவலை அடுத்து அதிகாரிகள் விரைந்து குண்டுகளை செயலிழப்பு செய்துள்ளனர்.மேலும் இதுவரை எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படாத நிலையில் மூதூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.