வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் வேண்டுகோளிற் இணங்க கௌரவ Dr .குணசீலன் அவர்கள் 19.02.2018அன்று வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன்போது பூவரசன்குளம் பிரதேச வைத்தியசாலைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன் போது கௌரவ அமைச்சர் .குணசீலன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன், பிராந்திய சுகாதார பணிப்பாளர் திருமதி Dr .பவானி,செட்டிகுளம் பிரதேச சபையின் தலைவர் சுப்பையா ஜெகதீஸ்வரன் ,வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் வே.குகதாசன் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது வைத்தியசாலையின் அடிப்படை தேவைகள் குறைகள் என பலகோணங்களில் கலந்து ஆராயப்பட்டு நிவர்த்தி செய்வதாக அமைச்சரினால் உறுதி மொழியளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கான விஜயத்தினை மேற்கொண்ட குழுவினர் அங்கு இருக்கக்கூடிய அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக கேட்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்வதாக கௌரவ அமைச்சரினால் கூறப்பட்டது.இதன் போது வைத்திய பொறுப்பதிகாரி முபாரிஸ் ,அபிவிருத்தி குழு தேவராசா ,சபாரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து ஸ்ரீராமபுரம் கிராமத்தில் அமையப்பெற்ற சுகாதார நிலையம் கட்டப்பட்டு நிதி பற்றாக்குறை காரணத்தினால் இடையில் வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தது.கௌரவ அமைச்சர் இவ் நிலையத்திற்கான நிதியினை தமது அமைச்சின் ஊடாக பெற்று தருவதாக கூறினார். மேலும் விஜயத்தின் இறுதியாக வவுனியா சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.இதில் வைத்தியசாலையின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என வைத்தியசாலை அபிவிருத்தி குழுவிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.