அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெறும் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சுக்கள் பலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமைச்சர் கபீர் ஹாசிமின் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுப் பதவி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கும், அவரது உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேவேளை நிதியமைச்சில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறப் போவதில்லை என்று தெரிய வந்துள்ளது.
இதுதவிர சரத் பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சுக்களில் இதுவரை மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் ஜனாதிபதியினால் இந்த அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன