இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்காக 5 ஆயிரத்து 75 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 5% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற அனைத்து வேட்பாளர்களினதும் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும் என்றும் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.அடுத்த மாதம் 2ம் திகதிக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும். இந்தப் பட்டியல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
அதேநேரம் எல்பிட்டிய பிரதேச சபைக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு இருப்பதாகவும், அதுதொடர்பான வழக்கு எதிர்வரும் 03ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாகவும், அதுதவிர ஏனைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் தேர்தல் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்