சிவனொளிபாதமலையை தரிசிப்பதற்காக சென்ற 20 பேரிடமிருந்து கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

பிலியந்தலை, குருணாகலை, கண்டி, தெஹிவளை மற்றும் றாகம பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்களும், ஹெரோயின் பக்கட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் வாகனங்களை திடீரென சோதனை செய்தனர்.

இதனையடுத்து குறித்த 20 பேரையும் கைது செய்த ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.