முல்லைத்தீவு செல்வபுரம், வட்டுவாகல் ஆகிய இரு கிராமங்களுக்கு எல்லையில் காணப்படும் சுடலையில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் மற்றும் அரச அதிகாரிகள் மதில் கட்ட முற்பட்டபோது அதனை செல்வபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தடுத்து அரச அதிகாரிகளோடு முரன்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவரை விடுவிக்க கோரி மக்கள் இன்று (26) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெறும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு செல்வபுரம், வட்டுவாகல் ஆகிய இரு கிராமங்களுக்கு எல்லையில் காணப்படும் சுடலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக செல்வபுரம் மக்கள் பெப்ரவரி 14 ஆம் திகதி காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தி இருந்தனர்.
பெப்ரவரி 13 ஆம் திகதி குறித்த சுடலைப்பகுதியில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் மற்றும் அரச அதிகாரிகள் மதில் கட்ட முற்பட்டபோது அதனை செல்வபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தடுத்து அரச அதிகாரிகளோடு முரண்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை விடுவிக்ககோரியும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரியும் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்
இருந்தும் செல்வபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவரை விடுவிக்க கோரி மக்கள் மீண்டும் இன்று (26) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெறும் நிலையில் மாவட்ட செயலகத்துக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.