முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று  இடம்பெற்றது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் நாடளாவிய ரீதியில் முல்லைத்தீவு கிளிநொச்சியில் காணி விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு, இரணைதீவு, மன்னார் முள்ளிக்குளம், கொழும்பு, காலி, நீர்கொழும்பு உள்ளிட்ட தென்பகுதி மக்கள் மற்றும் கிழக்கு மாகாண மக்கள் என எல்லா இடங்களிலிருந்தும் ஒன்றுதிரண்ட மக்கள் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் பொதுச்சந்தைக்கு முன்பாக இருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் நிறைவு செய்தனர்

வடக்கு கிழக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்படுள்ள காணிகளை மக்களிடம் வழங்க வேண்டுமெனவும் மக்களிடம் வழங்கப்பட்ட காணிகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்ப்படுத்த வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்