வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்ல அனுமதியளித்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், மாதத்தில் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றில் கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ரவிகரன் இன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தார். இதன் பிரகாரம் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது, 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறும் மாதத்தில் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றில் கையொப்பமிடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.