நல்லாட்சி அரசாங்கம் நல்ல பல உறுதி மொழிகளை வழங்கிவிட்டு பின் அவை அனைத்தையும் கைவிடும் கொள்கையை பின்பற்றி வருவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஜெனிவா மாநாட்டில் முன்வைக்கவுள்ள அறிக்கை வெளியானதை அடுத்து, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உள்நாட்டு கொள்கையாக மாத்திரமின்றி சர்வதேச கொள்கையாகவும் இலங்கையரசு பின்பற்றுகிறது. குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் விடயத்திலும் இதே நிலமை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதனையே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தமது அறிக்கையிலும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசிடம் மனித உரிமைகள் பேரவை முன்வைத்த கோரிக்கைகளும் இலங்கையரசு அமுலாக்குவதாக ஒப்புக்கொண்ட விடயங்களும் பின்னர் கைவிடப்பட்டுள்ளன. இலங்கையின் சட்டத்திட்டங்கள் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு ஏற்றவகையில் அமையவில்லை என்றும் மேற்படி ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.