குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்றுபகல் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாங்கனை குளத்தை சுற்றி 17,000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும் விவசாத்திற்கு பயன்படுத்தும் ராஜாங்கனை குளத்தை குடிநீர் போத்தல்களை தயாரிக்கும் சீனத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறியயே இந்ந ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வூர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டம் காரணமாக குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. எவ்வாறாயினும் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 4 பொலிஸார் காயமடைந்து தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 44 ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 39 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.