Header image alt text

இன்று அதிகாலை 02.00 மணி முதல் அதிகாலை 06.00 மணி வரை நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 504 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 720 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதி மீனவர்களின் தோணிகள் இனந்தெரியாதவர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (23) மகிழடித்தீவு ஆற்றுப்பகுதியில் தரித்து நிற்கவைக்கப்பட்டிருந்த மூன்று மீனவர்களின் தோணிகளே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெறும் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சுக்கள் பலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அமைச்சர் கபீர் ஹாசிமின் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுப் பதவி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவிற்கும், அவரது உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்காக 5 ஆயிரத்து 75 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 5% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற அனைத்து வேட்பாளர்களினதும் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும் என்றும் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். Read more

வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் வேண்டுகோளிற் இணங்க கௌரவ Dr .குணசீலன் அவர்கள் 19.02.2018அன்று வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன்போது பூவரசன்குளம் பிரதேச வைத்தியசாலைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன் போது கௌரவ அமைச்சர் .குணசீலன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன், பிராந்திய சுகாதார பணிப்பாளர் திருமதி Dr .பவானி,செட்டிகுளம் பிரதேச சபையின் தலைவர் சுப்பையா ஜெகதீஸ்வரன் ,வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் வே.குகதாசன் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர். Read more

தியதலாவ, கஹகொல்ல பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீ விபத்து சம்பவத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில் தியத்தலாவை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிப்பு சம்பவத்தாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 07 இராணுவ வீரர்கள், 05 விமானப்படை வீரர்கள் மற்றும் 07 பொது மக்களும் அடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். Read more

மாலைதீவில் தேசிய அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை மீள கட்டுயெழுப்புமாறு முன்வைக்கப்பட்டுவரும் சர்வதேச அழுத்தங்களை மீறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒன்பது எதிர்க்கட்சித் தலைவர்களின் விடுதலைக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 6 ஆம் திகதி ஜனாதிபதி அவசரகால உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். Read more

கிளிநொச்சியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கிவரும் ஷாப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 15 மாத காலப்பகுதியில் இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஷாப் நிறுவன முகாமையாளார் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஷாப் நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்கும் ஜப்பானி நாட்டின் இலங்கைப் பிரதிநிதி செல்வி நிறோசா வெல்கம, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஷாப் நிறுவனத்தின் பளை அவலுவலம் மற்றும் கண்ணி வெடி அகற்றும் பகுதிகளை பார்வையிட்டார். Read more

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸை நியமிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி, மார்ச் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் ஷைட் அல்ஹ_சைன் இலங்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். Read more

யாழ் மயிலிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இலங்கைகான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார்.

நோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ் காங்கேசன்துறை தெற்கு பளை வீமன்காமம் பகுதியில் சுமார் அறுபது லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தினை நோர்வே நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். Read more