Header image alt text

கொழும்பு – பங்குச் சந்தை ஒழுங்கு செய்யும் இன்வஸ்ட் லங்கா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றுமாலை சிங்கப்பூர் நோக்கிய தனது விஜயத்தினை ஆரம்பித்துள்ளார்.

இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்புக்காக எதிர்வரும் 2 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் இந்த மாநாட்டில், பிராந்தியத்தின் முன்னணி முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கு முன்னர் இந்த மாநாடு, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், இந்தியா, சுவிட்ஸர்லாந்து, ஹொங்கொங் ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் திரு. இலட்சுமணன் தங்கராசா.

எறிகணை வீச்சுக்களால் இரண்டு கால்களை இழந்ததுடன் அவயவங்கள் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுடன் வாழ்ந்துவரும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவரது நிலைமைகள் குறித்து அண்மையில் வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more

தேசிய பொருளாதார சபையினூடாக பொருளாதார புத்தெழுச்சியை நோக்கி ஒன்றிணைந்த 100 கடன் முன்மொழிவு முறைமைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சித் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அரச வங்கிகளின் தலைவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் அமைச்சர்களான மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்திற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம் நியமித்துள்ளார்.

இதனடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அலுவலகத்திற்கு ஜயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹட்டி பீரிஸ், சிரியானி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரஹீம், சோமசிறி லியனகே மற்றும் கணபதிபிள்ளை வேந்தன் ஆகிய ஆறு பேரும் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். Read more

அம்பாறை – கல்முனை பெரிய நீலாவணை பகுதியை ஊடறுத்து வீசிய பலத்த காற்று காரணமாக சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காற்று காரணமாக சுமார் 30 வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம் ஸியாத் தெரிவித்துள்ளார். பெரிய நீலாவணைப் பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் பலத்த காற்று வீசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் குறித்த பகுதியில் 54 கட்டடங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். Read more