கொழும்பு – பங்குச் சந்தை ஒழுங்கு செய்யும் இன்வஸ்ட் லங்கா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றுமாலை சிங்கப்பூர் நோக்கிய தனது விஜயத்தினை ஆரம்பித்துள்ளார்.
இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்புக்காக எதிர்வரும் 2 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் இந்த மாநாட்டில், பிராந்தியத்தின் முன்னணி முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கு முன்னர் இந்த மாநாடு, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், இந்தியா, சுவிட்ஸர்லாந்து, ஹொங்கொங் ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.