கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் திரு. இலட்சுமணன் தங்கராசா.

எறிகணை வீச்சுக்களால் இரண்டு கால்களை இழந்ததுடன் அவயவங்கள் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுடன் வாழ்ந்துவரும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவரது நிலைமைகள் குறித்து அண்மையில் வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையில் கல்வி கற்கும் அவரது பிள்ளைகள் இருவரினதும் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு சுவிஸ் நாட்டில் வதியும் புளொட் அமைப்பின் உறுப்பினர் திரு. இராஜேந்திரம் அவர்கள் ரூ 15இ000ஃ- நிதியினை வழங்கி வைத்துள்ளார்.

அவரது மகள் கீர்த்தனாவின் பிறந்த தினத்தை ( 10.02.2018 ) முன்னிட்டு வழங்கப்பட்ட இவ் உதவியை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் ) இன் கிளிநொச்சி மாவட்ட மத்திய குழு உறுப்பினர் தோழர் சுப்பிரமணியம் ( மணியம் ) கையளித்திருந்தார்.