Header image alt text

நல்லாட்சி அரசாங்கமானது தெற்கு மக்களைக் காட்டி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினையையும் தீர்க்கவில்லை. அதுபோல் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினையைக் காட்டி தெற்கு மக்களின் பொருளாதாரப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை.

இதனால் தான் நல்லாட்சி அரசாங்கம் தோல்விகண்டது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கந்தையா சிவநேசன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். Read more

“வவுனியா நகரசபை உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ள சு.காண்டீபன்”-

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது ரூபவாஹினி வெற்றி கிண்ண கரப்பந்தாட்ட போட்டியின் வவுனியா மாவட்டத்திற்கான போட்டி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் தலைமையில் வ.வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபைத் தேர்தலின் முதலாம் வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக வாக்குகளினை பெற்று நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் கலந்து சிறப்பித்து தனது பிரதம விருந்தினர் உரையில் மேலும் தெரிவிக்கையில்.
Read more

ஒட்டாவா சாசனமான கண்ணிவெடி எதிர்ப்பு சாசனம் தொடர்பான விசேட தூதுவர் இளவரசர் மயர்ட் பின் ராட் பின் செயிட் அல் ஹ_சைன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த மாதம் 4ம் திகதிமுதல் 7ம் திகதிவரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார். கண்ணிவெடிக்கு எதிரான சாசனத்தை அங்கீகரித்த 163வது நாடாக இலங்கை மாறுகின்ற நிலையில், Read more

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் தமிழரசு கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர், தமிழ் மக்கள் பேரவையின் மத்தியகுழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது குறித்த மூன்று பேரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், பேரவையின் இணைத்தலைவர் சீ.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைவாக அவர்கள் மத்தியகுழுவில் உள்வாங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு – வட்டுவாகால் பாலத்திற்கு அருகில் நந்திக்கடல் களப்பில் 22 அடி உயரமான சிவப்பு கொடியொன்று நேற்று ஏற்றப்பட்டுள்ளதாக வெள்ளமுள்ளிவாய்க்கால் மக்கள் தெரிவித்துள்ளனர்.

நந்திக்கடல் களப்பு ஊடான வட்டுவாகால் பாலம் சேதமடைந்துள்ளதால் குறித்த கொடியை சிலர் ஏற்றிவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் 200 மீற்றரான வட்டுவாகால் பாலம், உரிய முறையில் நிர்மாணிக்கப்படாததால் அந்த வீதி ஊடாக பயணிப்பது ஆபத்தானது என மக்கள் தெரிவித்துள்ளனர். Read more

திருகோணமலை உப்புவெளி காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நடாத்திய சுற்றிவளைப்பின்போது கைக்குண்டுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது. மிஹிந்துபுர பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்றைய தினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். உப்புவெளி காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.