திருகோணமலை உப்புவெளி காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நடாத்திய சுற்றிவளைப்பின்போது கைக்குண்டுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது. மிஹிந்துபுர பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்றைய தினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். உப்புவெளி காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.