நல்லாட்சி அரசாங்கமானது தெற்கு மக்களைக் காட்டி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினையையும் தீர்க்கவில்லை. அதுபோல் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினையைக் காட்டி தெற்கு மக்களின் பொருளாதாரப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை.

இதனால் தான் நல்லாட்சி அரசாங்கம் தோல்விகண்டது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கந்தையா சிவநேசன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கேப்பாபுலவு மக்களது நிலமீட்பு போராட்டம் ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில், நேற்றையதினம் அந்த மக்களை நேரில் சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.