வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் தமிழரசு கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர், தமிழ் மக்கள் பேரவையின் மத்தியகுழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது குறித்த மூன்று பேரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், பேரவையின் இணைத்தலைவர் சீ.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைவாக அவர்கள் மத்தியகுழுவில் உள்வாங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.