Header image alt text

திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேற்கொள்ளும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தை கடக்கும் நிலையிலேயே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். இன்றுகாலை 10மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடத்திலிருந்து திருமலை தலைமை காவல்நிலைய சந்திவரை பேரணியாக சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்தில் நிறைவுசெய்துள்ளனர்.

அமெரிக்கப் படை இலங்கையில் காலூன்றுவதற்கான வேலைத்திட்டங்கள் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அது இலங்கையின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்திற்கும் பெரும் சவாலாக அமையும் என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கென அமெரிக்காவின் தொண்டர் சமாதான படையணி என்ற பேரிலேயே அப்படையணி நாட்டில் காலூன்ற உள்ளது. அப்படையணியின் தலைவரை அமெரிக்க ஜனாதிபதியே நியமிப்பார். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

313 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இதன்போது வழங்கப்பட்டன. இதில் 212 சிங்கள மொழிமூலமான பட்டதாரிகளுக்கும், 91 தமிழ் மொழிமூலமான பட்டதாரிகளும் உள்ளடங்குகின்றனர். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் நேற்று இனந்தெரியாத நபர்களினால் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 39ஆம் கிராமமத்தில் வயல்வெளி ஊடாக வந்து கொண்டிருந்தவரை வழிமறித்த சிலர் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

படுகாயமடைந்த செல்வாபுரம் இரண்டாம் வட்டாரம், 39ஆம் கிராமத்தினைச் சேர்ந்த 49 வயதான மயில்வாகனம் கமலேஸ்வரன் என்பவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

குறிப்பிடப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தை பெயரிடாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நூற்றுக்கு 25சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளுராட்சி சபைகளில் நியமிப்பது கட்டாயமானதாகும். இந்நிலையில், அரசியல் கட்சியோ அல்லது சுயாதீன குழுவோ, கட்டாயமாக்கப்பட்டுள்ள பெண்களின் பிரதிநிதித்துவத்தை நியமிக்காவிட்டால், அவற்றின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட மாட்டாது. Read more

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் காணப்படுகின்ற தாமதம் காரணமாக அதிருப்தியடைந்துள்ளதாக கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேர வையில் தெரிவித்துள்ளன.

அத்துடன் இலங்கை அரசாங்கம் பொதுநலவாய மற்றும் சர்வதேச விசாரணையாளர்கள் நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறையை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ள நிலையில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்துவதில் முன்னேற்றத்தை வெளிக்காட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பிரிட்டன் அறிவித்திருக்கிறது. Read more

தியத்தலாவை பேரூந்து குண்டுவெடிப்பு தொடர்பில் கைக்குண்டை கொண்டு சென்ற இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி காலை தியத்தலாவை – கஹகொல்ல பகுதியில் தனியார் பேரூந்தொன்றில் ஏற்பட்ட வெடிப்பையடுத்து ஏற்பட்ட தீயில் சிக்கி 7 இராணுவத்தினரும் 5 விமானப்படை வீரரரும் 7 பொதுமக்களும் காயமடைந்தனர். இந்நிலையில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இராணுவவீரர் எடுத்துச்சென்ற கைக்குண்டே வெடித்ததாக தெரியவந்துள்ளது. Read more

இந்திய ஆழ்கடல் பகுதியில் காயமடைந்த நிலையில், படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் உட்பட சில இலங்கை மீனவர்கள், இந்திய கடலோர காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள கடல்வழி மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய அவர்கள் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகமொன்று தகவலை வெளியிட்டுள்ளது. ஐந்து இலங்கை மீனவர்கள், கடந்த மாதம் 14ஆம் திகதி படகு ஒன்றில் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர். Read more

சிரியாவில் இடம்பெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

இந்த போராட்டத்தில் பங்குபற்றுவோருக்காக, யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் முன்றலில் இருந்தும், பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இருந்தும் நாளை காலை 8மணிக்கு விசேட பேருந்து சேவை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை பிரதேசத்தில் இரும்பு உருக்கும் ஆலை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொட்டடி பகுதியில் இரும்பு கடை நடாத்தி வரும் ஆனைக்கோட்டையை சேர்ந்த 69 வயதான சிலுவைராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடைக்கு பின்புறம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.