அமெரிக்கப் படை இலங்கையில் காலூன்றுவதற்கான வேலைத்திட்டங்கள் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அது இலங்கையின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்திற்கும் பெரும் சவாலாக அமையும் என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கென அமெரிக்காவின் தொண்டர் சமாதான படையணி என்ற பேரிலேயே அப்படையணி நாட்டில் காலூன்ற உள்ளது. அப்படையணியின் தலைவரை அமெரிக்க ஜனாதிபதியே நியமிப்பார். அப்படையணியை இலங்கையில் காலூன்றச் செய்வது குறித்த உடன்படிக்கைக்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கம் முன்னெடுத்துள்ள வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளார்.