சிரியாவில் இடம்பெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

இந்த போராட்டத்தில் பங்குபற்றுவோருக்காக, யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் முன்றலில் இருந்தும், பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இருந்தும் நாளை காலை 8மணிக்கு விசேட பேருந்து சேவை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சிரிய படுகொலைகளுக்கு எதிராக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இறுதியுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் நாளைகாலை இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.