தியத்தலாவை பேரூந்து குண்டுவெடிப்பு தொடர்பில் கைக்குண்டை கொண்டு சென்ற இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி காலை தியத்தலாவை – கஹகொல்ல பகுதியில் தனியார் பேரூந்தொன்றில் ஏற்பட்ட வெடிப்பையடுத்து ஏற்பட்ட தீயில் சிக்கி 7 இராணுவத்தினரும் 5 விமானப்படை வீரரரும் 7 பொதுமக்களும் காயமடைந்தனர். இந்நிலையில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இராணுவவீரர் எடுத்துச்சென்ற கைக்குண்டே வெடித்ததாக தெரியவந்துள்ளது. குறித்த இராணுவவீரரும் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில், அவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.